பண்டிகை நாளிலாவது மீனவர்களை மீட்டுத் தாருங்கள்: ஜி.கே.வாசன்

பண்டிகை நாளிலாவது மீனவர்களை மீட்டுத் தாருங்கள்: ஜி.கே.வாசன்
பண்டிகை நாளிலாவது மீனவர்களை மீட்டுத் தாருங்கள்: ஜி.கே.வாசன்

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை பண்டிகை காலத்திலாவது மீட்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கை சிறைகளில் இருந்து விடுக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேர் தாயகம் திரும்பினர். யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 69 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சர்வதேச எல்லையில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கிருந்து காரைக்கால் துறைமுகம் வந்த மீனவர்களை அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இந்நிலையில் இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் இந்தப் பண்டிகை காலத்திலாவது மீட்க வேண்டும் என ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மத்திய அரசிடம் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இந்தப் புத்தாண்டு முதல் இலங்கை கடற்படையின் சிறைப்பிடித்தல் நடைபெறாமல் தமிழக மீனவர்களின் பிரச்னை நீங்கி, வாழ்வாதாரம் நிம்மதியாக, நம்பிக்கையோடு தொடர அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com