டிரெண்டிங்
‘உயிரோடு கணவர் வேண்டும்’ - கதறி அழுத சுப்பிரமணியனின் மனைவி!
‘உயிரோடு கணவர் வேண்டும்’ - கதறி அழுத சுப்பிரமணியனின் மனைவி!
‘எனது கணவரை உயிருடன் கொடுங்கள்' எனக்கு அவர்தான் வேண்டும்’ என்று காவலர் சுப்பிரமணியனின் மனைவி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே ரவுடியை பிடிக்க முயன்றபோது, நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியனின் உடல் நேற்று சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது இறுதிச்சடங்கு நிகழ்விற்கு வந்த டிஜிபி திரிபாதி, கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் எம்.எல்.ஏ. சண்முகநாதனிடம் கண்ணீர் விட்டு கதறினார் சுப்பிரமணியனின் மனைவி. அப்போது அவர் கூறுகையில்,
‘’10 மாத ஆண் குழந்தையின் தாயான நான், தற்போது 3 மாதம் கர்ப்பிணியாக உள்ளேன். எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள். எனக்கு என் கணவர் தான் வேண்டும்’’ என்று திரும்பத்திரும்ப கூறினார். அவரது கதறல் அனைவரது நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.