\
"அரசியலில் இருந்து விடுபடுகிறோம்": பண்ருட்டி எம்எல்ஏ வீட்டின் முன்பு குவிந்த ஆதரவாளர்கள்

"அரசியலில் இருந்து விடுபடுகிறோம்": பண்ருட்டி எம்எல்ஏ வீட்டின் முன்பு குவிந்த ஆதரவாளர்கள்

"அரசியலில் இருந்து விடுபடுகிறோம்": பண்ருட்டி எம்எல்ஏ வீட்டின் முன்பு குவிந்த ஆதரவாளர்கள்
Published on: 

பண்ருட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதியில் 2016-ஆம் ஆண்டு சத்யா பன்னீர்செல்வம் என்பவர் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு மீண்டும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சீட் வழங்காமல் அதிமுக வேட்பாளராக ராஜேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா பன்னீர்செல்வம் மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுகவிலிருந்தும் அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனைக்கேட்ட அவரது ஆதரவாளர்கள் பண்ருட்டியில் உள்ள சத்யா பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு குவிந்து வருகிறார்கள்.

இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் சத்யா பன்னிர்செல்வம் ஆதரவாளர்கள் ஒருசிலர் அதிமுகவில் தாங்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்து வருவதால் பண்ருட்டியில் ஒரு பதட்டமான சூழல் உருவாகி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com