வீட்டில் பல்லித் தொல்லையா?  இனி கவலை வேண்டாம்

வீட்டில் பல்லித் தொல்லையா?  இனி கவலை வேண்டாம்
வீட்டில் பல்லித் தொல்லையா?   இனி கவலை வேண்டாம்
Published on

முட்டை ஓடு

பல்லிகளுக்கு முட்டை ஓட்டின் வாசனை பிடிக்காது. எனவே பல்லிகள் அதிகம் நடமாடும் இடங்களில் போட்டு வையுங்கள். முட்டை ஓட்டை சுத்தமாக கழுவிவிட்டால் பிசுபிசுப்பு இருக்காது.

காபி பவுடர்

கரப்பான் பூச்சிகளைப் போலவே பல்லிகளுக்கும் காப்பி பவுடரின் நெடி சுத்தமாகப் பிடிக்காது. கொஞ்சம் புகையிலைப் பொடியுடன் காப்பிப்பொடியைக் கலந்து வீட்டின் மூலைகளில் போட்டுவைத்தால் வீட்டிற்குள் நுழையவே பல்லிகள் பயப்படும்.

பூண்டு மற்றும் வெங்காயம்

பூண்டிலிருந்து வெளிவரும் நொதி ஒருவித நெடியை உண்டுபண்ணும். இதனால் பல்லிகள் நெருங்காது. பூண்டைப் போலவே வெங்காயத்திலிருந்தும் ஒருவித காரமான வாசனை வரும். எனவே வெங்காயத்தை ஜன்னல்களில் கட்டித் தொங்கவிடலாம். அல்லது சாறு பிழிந்து ஸ்ப்ரே பாட்டில்களில் ஊற்றி, முக்கியமான இடங்களில் அடித்துவிடலாம்.

மிளகு

அளவுக்கு அதிகமான பல்லித்தொல்லை இருக்கும்போது இந்த வழியைப் பின்பற்றலாம். நுண்ணிய துளையுள்ள பைகளில் மிளகைப் போட்டு ஆங்காங்கே வைத்துவிடுங்கள்.

மிளகாய்ப்பொடி

இதையும் ஆங்காங்கே போட்டு வைக்கலாம். மற்ற இடங்களில் பட்டால் காரத்தால் எரிச்சல் வரும் என்பதால் ஸ்பெரே பாட்டிலில் நீர் கலந்து அடித்துவிடலாம். காய்ந்த மிளகாய்களையும் கூட போட்டுவைக்கலாம்.

மயிலிறகு

வீட்டின் முன்புறம் அல்லது ஜன்னல் ஓரங்களில் மயிலிறகை சொருகி வைக்கலாம். பொதுவாகவே மயில் பல்லியை சாப்பிட்டுவிடும் என்பதால் பல்லி நெருங்காது.

ஐஸ் வாட்டர்

ஜில்லென்ற தண்ணீர் பட்டால் பல்லி உறைந்து போய்விடும். அதனால் நகர முடியாது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com