’’அப்போது வலித்திருக்கும்; இப்போது பின்னியெடுக்கிறார்" -கெயில் குறித்து கங்குலி

’’அப்போது வலித்திருக்கும்; இப்போது பின்னியெடுக்கிறார்" -கெயில் குறித்து கங்குலி

’’அப்போது வலித்திருக்கும்; இப்போது பின்னியெடுக்கிறார்" -கெயில் குறித்து கங்குலி
Published on

ஆடும் லெவனில் சேர்க்காமல் நீண்டு நாட்களாக உட்கார வைக்கப்பட்டதால்தான் கிறிஸ் கெயில் இப்போது விளாசுகிறார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய சவுரவ் கங்குலி "நாமெல்லாம் என்ன நினைத்தோம் கிரிஸ் கெயில் விளையாடாமல் மிகவும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டும், சுற்றிக்கொண்டும் இருப்பதாக நினைத்தோம். ஆனால் அவரை ஆடும் லெவனில் சேர்க்காமல் அணி நிர்வாகம் உட்கார வைத்திருந்தது. இது கிறிஸ் கெயிலுக்கு நிச்சயம் வலித்திருக்கும். அதனால்தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதும் ஆர்சிபிக்கு எதிராக அரைசதம் விளாசினார்" என்றார்.

மேலும் "இந்த ஒரு விஷயத்தில் இருந்தே கிறிஸ் கெயிலிடம் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். கெயிலின் அதிரடி ஆட்டமே ஐபிஎல் தொடர் எத்தகைய போட்டி நிறைந்தது என நாம் தெரிந்துக்கொள்ளலாம். இந்தாண்டு ஐபிஎல் தொடர் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்தாண்டு தொடரில் கே எல் ராகுல், ஷிகர் தவன் பேட்டிங்கை பெரிதும் ரசித்தேன். சில பீல்டிங் முயற்சிகள் மிகவும் அபாரமாக இருந்தது" என்றார் கங்குலி.

"இந்தத் தொடரில் வெளிநாட்டு பவுலர்கள் அன்பிச் நார்ஜே, ரபாடா சிறப்பு. அதுபோல முகமது ஷமி பிரமாதம், அதிலும் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் மயாங்க் அகர்வால் டி20 இல் ஆச்சரியப்படுத்துகிறார்" என்றார் கங்குலி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com