பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்திக்கிறார் ஜி.கே.வாசன்

பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்திக்கிறார் ஜி.கே.வாசன்

பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்திக்கிறார் ஜி.கே.வாசன்
Published on

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. பிரதமர் மோடி அண்மையில் சென்னை வந்த போது அவரைப் பிற தலைவர்களுடன் ஜி.கே.வாசனும் வரவேற்றார். அப்போது தன்னை சந்திப்பது குறித்து வாசனுடன் பிரதமர் பேசியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது மோடியை வாசன் சந்திக்க உள்ளார். பாஜக தலைவர் அமித்ஷாவையும் அவர் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றிருந்தது. இக்கட்சி சார்பில் ஜி.கே.வாசன் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் பிரதமரை வாசன் சந்திக்க உள்ளது அரசியல் ரீதியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com