சேலம்: இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா

சேலம்: இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா

சேலம்: இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா
Published on

மேட்டூர் அருகே இறுதிச்சடங்கில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் நேற்று மட்டும் 2,212 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,749 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல், தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தல் போன்ற நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென அரசு வலியுறுத்துகிறது. இந்நிலையில் மேட்டூர் அருகே இறுதிச்சடங்கில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே துக்க நிகழ்வு ஒன்றில் பலர் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com