திண்டுக்கல்: நத்தம் பகுதியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு!!
நத்தம் பேரூராட்சி பகுதியில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் நேற்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் நாளை முதல் ஜூலை 20ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்
'திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி & கிராமப் பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 11 முதல் ஜூலை 20 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பால் & மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும். இதற்கு அனைத்து
வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.