முக்கியச் செய்திகள் | சீன எல்லையில் பதற்றம் முதல் எஸ்.பி.பி.யின் உடல்நிலை நிலவரம் வரை..

முக்கியச் செய்திகள் | சீன எல்லையில் பதற்றம் முதல் எஸ்.பி.பி.யின் உடல்நிலை நிலவரம் வரை..

முக்கியச் செய்திகள் | சீன எல்லையில் பதற்றம் முதல் எஸ்.பி.பி.யின் உடல்நிலை நிலவரம் வரை..
Published on


1.விவசாயிகள் வருவாயை அதிகரிப்பது தொடர்பான 3 முக்கிய மசோதாக்கள் மக்களவையில் தாக்கல். வேளாண்மைத் துறையினருக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்.

2.பேச்சுவார்த்தைகளுக்கு பின்பும் இந்திய - சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதாக தகவல். கிழக்கு லடாக்கில் என்ன நிலவரம் என இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.


3. வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை. விலை ஏற்றத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை.

4. சூர்யாவிற்கு எதிராக நடவடிக்கை தேவையில்லை என முன்னாள் நீதிபதிகள் 6 பேர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம். நீதிமன்றத்தை விமர்சிக்கும் வகையில் யாரும் பேசக் கூடாது என நீதித்துறையினர் வலியுறுத்தல்.

5. நீட் தேர்வால் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்குவது தற்கொலைகளை ஊக்குவிக்கும். சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து.

6. சென்னையில் மழைநீர் தேங்கிய இடத்தில் மின்கசிவால் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழப்பு. மதுரையிலும் மின் வயர் அறுந்து விழுந்து மூதாட்டி மரணம்.


7. சென்னையில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராத விதிப்பு தீவிரம். இரண்டே நாட்களில் இரண்டு கோடி ரூபாய் வசூல் ஆனதாக தகவல்.

8. திருச்சியில் நிதி நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார். நடவடிக்கை எடுக்க கோரி தமிழகமெங்குமிருந்து முதலீட்டாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை.

9.கொரோனா என்னும் இக்கட்டான காலத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாநிலங்களவையில் உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்.

10.தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் இந்திக்கு எதிராக போராட்டம். இந்தி தெரியாது போடா என்பது போல ஹிந்தி கொத்தில்லா ஹோகோ என ட்ரெண்டாகும் வாசகம்.

11.பொது முடக்க‌காலத்தில் பிஎஃப் கணக்கில் இருந்து 39 ஆயிரம் கோடி ரூபாயை வெளியே எடுத்த தொழிலாளர்கள். நாடாளுமன்றத்தில் அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தகவல்.

12. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவர்கள் உதவியுடன் எழுந்த அமர்வதாக மகன் சரண் தகவல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com