80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு இலவச வாகன வசதி செய்துத் தரப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ள 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னை, திருச்சி மற்றும் கோவையில் இலவச வாகன வசதி செய்துத்தரப்படும். வாடகை வாகனங்களுக்கு உள்ள ( UBER APP) செயலியை பயன்படுத்தி இலவச பயணத்துக்கு முன்பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
மேலும் இந்த சேவைக்கு முன்பதிவு செய்யலாம் எனவும், 5 கிலோமீட்டர் வரை 200 ரூபாய் வரையுள்ள கட்டணத்தை தேர்தல் ஆணையமே செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.