\
முழு பொதுமுடக்கம் : 4 மாவட்ட அம்மா உணவகங்களில் இலவச உணவு

முழு பொதுமுடக்கம் : 4 மாவட்ட அம்மா உணவகங்களில் இலவச உணவு

முழு பொதுமுடக்கம் : 4 மாவட்ட அம்மா உணவகங்களில் இலவச உணவு
Published on

முழு பொதுமுடக்கம் அமலாக உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் பகுதி மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை முதல் 12 நாட்களுக்கு முதல் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முழு பொதுமுடக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com