டிரெண்டிங்
நீட் விவகாரம்: மோடியை சந்திக்க அமைச்சர்கள் டெல்லி பயணம்
நீட் விவகாரம்: மோடியை சந்திக்க அமைச்சர்கள் டெல்லி பயணம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான தமிழக அரசின் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறும் முயற்சியாக தமிழக அமைச்சர்கள் 4 பேர் இரண்டாவது முறையாக டெல்லி செல்கின்றனர்.
அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், தங்கமணி ஆகியோர் இன்று இரவு டெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளனர். அவர்கள் நாளைய தினம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, நீட் தேர்வில் இருந்து விலக்குக்கோரும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்றுத்தருமாறு வலியுறுத்த உள்ளனர். அண்மையில் தமிழக அமைச்சர்கள் 5 பேர் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமரைச் சந்தித்து இதே கோரிக்கையை முறையிட்டது குறிப்பிடத்தக்கது.