\
மாநிலங்களவை எம்பி ஆனார் மன்மோகன் சிங்

மாநிலங்களவை எம்பி ஆனார் மன்மோகன் சிங்

மாநிலங்களவை எம்பி ஆனார் மன்மோகன் சிங்
Published on

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்பி ஆக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மன்மோகன் சிங். முன்னாள் பிரதமரான இவர், ஐந்து முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அவர் அசாம் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது பதவிக்காலம் ஜூன் மாதம் முடிவடைந்தது. பாஜக எம்.பி., மதன்லால் சைனி காலமானதை அடுத்து ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை எம்பி பதவிக்கு மன்மோகன் சிங் மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மன்மோகன் சிங் போட்டியின்றி ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மன்மோகன் சிங்கின் அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com