“எதிர்மறை தகவல்களை தரும் பொருளாதார ஆய்வறிக்கை”- ப.சிதம்பரம்
மத்திய அரசு சமர்ப்பித்துள்ள பொருளாதார ஆய்வறிக்கை எதிர்மறையான தகவல்களை தருவது போல் தமக்குத் தோன்றுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30-ஆம் தேதி பதவியேற்றது. இந்த அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கலாகிறது. இதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பாக நேற்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆய்வறிக்கையின் 2-ம் பாகத்தில் இடம் பெற்றுள்ள பொருளாதார வளர்ச்சி மந்தம், வருவாய் குறைவு, கச்சா எண்ணெய் விலையால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் ஊக்கம் தருவதாக இல்லை. நடப்பு நிதியாண்டில் 7 சதவிகித பொருளாதார வளர்ச்சி இருக்கும் என பொத்தாம் பொதுவாக கூறியிருப்பதாகவும் துறை வாரியான கணிப்புகள் இல்லை” எனக் குறை கூறியுள்ளார்.