திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன்!

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன்!
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன்!

அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் திமுகவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் திமுகவில் இணைந்தார். மாவட்டச் செயலாளர் பதவி பறிபோன நிலையில் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுகவில் இணைந்துள்ளார் லட்சுமணன்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லட்சுமணன், “தமிழகத்தின் நலனையும் உரிமையையும் பாதுகாத்துக்கொண்டிருக்கிற கட்சி திமுக. ஆளுமைமிக்க தலைமையின் கீழ் பணியாற்றவே திமுகவில் இணைந்துள்ளேன். தமிழகத்தில் வலுவான அரசு அமைய வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் தான் திமுக வில் இணைந்து இருக்கிறேன்.

கொரோனா நெருக்கடி இருக்கும் காலத்தில் கூட யார் முதல்வர் வேட்பாளர் பிரச்னை தான் அதிமுக வில் எழுந்து இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கட்சியினரை ஒருங்கிணைக்க அமைச்சர் சி.வி.சண்முகம் முறையாக செயல்படவில்லை. இளைஞரணி செயலளார் உதயநிதிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com