“பூத் வாரியாக வாட்ஸ்அப் குரூப்” தேர்தல் களத்திற்கு தயாராகும் பாஜக

“பூத் வாரியாக வாட்ஸ்அப் குரூப்” தேர்தல் களத்திற்கு தயாராகும் பாஜக
“பூத் வாரியாக வாட்ஸ்அப் குரூப்” தேர்தல் களத்திற்கு தயாராகும் பாஜக

அடுத்த ஆண்டு மே மாதம் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக மற்றும் பிற கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. கூட்டணி அமைக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றாலும், அதற்காக காத்திருக்காமல் தங்களது பிரச்சாரத்தை இரு கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ளன. பொதுக் கூட்டங்கள், நிர்வாகிகளுடனான சந்திப்பு என பல்வேறு வழக்கமான வழிகள் இருந்தாலும், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப டெக்னாலஜியை பயன்படுத்துவதிலும் இந்தக் கட்சிகள் மும்முரம் காட்டுகின்றன. 

2014ம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்போது, சில தொழில்நுட்பங்களை பாஜக பயன்படுத்தியது. மக்களவை தேர்தல் மட்டுமல்லாமல் அதனை தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடியது. அதற்கு பாஜக தலைவர் அமித்ஷாவின் தேர்தல் வியூகமே காரணம் என்று பேசப்பட்டது. 

இந்நிலையில், வருகின்ற மக்களவை தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி பல்வேறு யுக்திகளை கையாள திட்டமிட்டுள்ளது. ‘வாட்ஸ்அப்’பை கொண்டு புதிய பிரச்சார போரினை நடத்த அமித்ஷா திட்டமிட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பூத்திலும் உள்ள நிர்வாகிகள் மூலமாக வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டும். அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களது நிர்வாகிகளை பட்டியலை தயாரிக்குமாறு அடிமட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு சென்றுள்ளது. 

ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட ரீதியாக சுற்றுப் பயணத்தை சூறாவளியாக மேற்கொண்டு வரும் அமித்ஷா, இதற்கான அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு வழங்கி வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற சமூக வலைத்தள ஆர்வலர்களுக்கான கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “சமூக வலைத்தளங்களில் விழிப்புடன் செயல்படவில்லை என்றால் வெற்றி பெற முடியாது” என்று கூறினார். 

நம்முடைய நாட்டில் சுமார் 100 கோடிக்கு மேல் செல்போன் இணைப்புகள் உள்ளன. இதில், சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்கள். ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் வாட்ஸ்அப் செயலியை வைத்திருப்பார்கள். அத்தகையை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வாக்குகளை சேகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள சுமார் 9 லட்சம் பூத்களில் இந்த வாட்ஸ் அப் குரூப்கள் உருவாக்கப்படும். ஒரு குரூப்பில் அதிகபட்சம் 256 பேர் இருப்பார்கள். வருகின்ற ஜனவரி மாதம் முதல் இந்தப வாட்ஸ் அப் பிரச்சாரத்தை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com