Foodathon உறுப்பினர்கள்
Foodathon உறுப்பினர்கள்PT

'உலக உணவு நாள்'.. உணவின் முக்கியத்துவத்தை உணர்த்த ‘Foodathon 2.0’ விழிப்புணர்வு மாரத்தான்!

Foodathon 2.0 - பசியை களைவதற்கும் உணவை வீணாக்காமல் இருப்பதற்கும் நடைபெறும் விழிப்புணர்வு மாரத்தான்.
Published on

இவ்வருட உலக உணவு தினத்தையொட்டி (அக்டோபர் 16) உணவு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி ‘இனிவரும் காலத்தில் பசியால் எவரும் அவதியுறக்கூடாது, இனி யாரும் உணவை வீணாக்க கூடாது’ என்பதை வலியுறுத்த Foodathon 2.0 விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.

அக்டோபர் 15ம் தேதி சென்னை பெசண்ட் நகரில் நடக்கும் இந்த மாரத்தான், ‘NO FOOD WASTE’ என்ற தன் ஆர்வல நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது.

முன்னதாக நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறை நடத்திய விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் FOODATHAN 2.O-க்கான லோகோவை அறிமுகம் செய்திருந்தார்.

இவ்வருடம் ஃபுடத்தானின் முக்கிய 2 நோக்கங்கள்:

- அடுத்த ஒரு வருடத்தில் பசியுடன் உள்ள, வீடு இல்லாத, உணவு தேவைப்படும் 10 லட்சம் பேருக்கு உணவு அளிப்பது.

- உணவை வீணாக்காமல் இருக்கவும் மீதமான உணவை தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com