ஓணம் விருந்து
ஓணம் விருந்துWebTeam

அடப்பிரதமன் to தேங்காய், அரிசி பாயசம்.. ஓணம் சத்யா பண்டிகையின் உணவு பதார்த்தங்கள்!

ஓணம் சத்யா அன்று கேரளாவில் 64 வகையான உணவு பறிமாறப்பட்டு அனைவரும் சேர்ந்து தரையில் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இயற்கையை விரும்பும் கேரள மக்கள் உடலுக்கும், சுவைக்கும் இனிதான உணவையே விரும்புவதால், இன்று தலைவாழை இலையிட்டு, வகைவகையான பாயசங்கள் பொரியல் வகைகள், ஊறுகாய்கள், கூட்டு, எரிசேரி, ரசம், சாம்பார், பழங்கள் என 64 வகையான பலவகை பதார்த்தங்களை செய்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்

1. அடப்பிரதமன்

WebTeam

இது அரிசிமாவை இலையில் தட்டி வேகவைத்து, வெல்லம், தேங்காய்பால்ம் முந்திரி, ஏலக்காய், நெய் சேர்த்து செய்யும் ஒரு சுவையான பாயசம்

2. சக்கபிரதமன்

WebTeam

பலா பழத்தை வேக வைத்து, வெல்லம், நெய், முந்திரிபருப்பு சேர்ந்துச் செய்யப்படும் ஒருவகை பாயசம் ஆகும்,

3. சேமியா பாயசம்

சேமியா பாயசம்
சேமியா பாயசம்WebTeam

வறுத்த சேமியா, பால், சக்கரை, முந்திரி, ஏலக்காய் சேர்த்து செய்யப்படும் சுவையான பாயசமாகும்

4. தேங்காய், அரிசி பாயசம்

WebTeam

அரிசி தேங்காயை அரைத்துக்கொண்டு, வேகவைத்து அத்துடன் வெல்லம், ஏலக்காய் முந்திரி சேர்ந்து செய்யப்படும் சுவையான பாயசம் ஆகும்

5. வெள்ளரிக்காய் புளிச்சேரி

WebTeam

வெள்ளரிக்காய், தயிர், கடுகு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்யப்படும் ஒருவித பச்சடி.

6. சிப்ஸ்

WebTeam

நேந்தரம்பழத்தில் செய்யப்படும் சிப்ஸ்

7. மாங்கா ஊறுகாய்

WebTeam

மாங்காயை நறுக்கி, உப்பு, காரம், தூவி, கடுகு தாளித்து வைக்கப்படும். ருசியான சுவையான ஊறுகாய் இது.

8. எலுமிச்சை ஊறுகாய்

WebTeam

எல்ய்மிச்சை பழத்தி ஊறவைத்து உப்பு, காரம் சேர்த்து தாளித்து செய்யப்படும் ஊறுகாய் இது.

9. இஞ்சிஊறுகாய்

WebTeam

இஞ்சி எடுத்து, தோல்நீக்கி, உப்பு, காரம் சேர்த்து அரைத்து கடாயிலிட்டு எண்ணெய் ஊற்றி வதக்கப்படும் ஊறுகாய் இது. உடலுக்கு மிகவும் நல்லது.

10. பாவற்காய் பச்சடி

WebTeam

பாவற்காய், வதக்கி, தயிர், உப்பு, சேர்த்து மிளகாய் தாளித்து செய்யப்படும் ஒருவித பச்சடி. உடலுக்கு மிகவும் உகந்தது.

11. பீட்ரூட் பச்சடி

WebTeam

பீட்ரூட் தோல் சீவி வேகவைத்து உப்பு, தயிர் சேர்ந்து செய்யப்படும் ஒருவித பச்சடி. பார்ப்பதற்கு கலராக இருந்தாலும் உடலுக்கு உகந்தது

12. அவியல்

WebTeam

பல காய்கறிகளை வேகவைத்து தேங்காய் மிளகாய் அரைத்து, தயிர் கலந்து செய்யப்படும் அவியல் ஒன்று இருந்தால் போதும் இலை காலியாவது உறுதி. மிகவும் சுவையானது.

13. கூட்டு கறி,

WebTeam

காய்கறிகளை வேகவைத்து தேங்காய் பருப்பு சேர்த்து செய்யப்படும் கூட்டு. உடலுக்கு நல்லது.

14. பப்படம்.

WebTeam

இது அப்பளத்தை ஒத்த ஒன்று தான் என்றாலும் இதன் சுவை வேறு. எண்ணெயில் போட்டதும் ஊரே மணக்கும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com