உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாக்களிக்க வந்த வாக்களர்களை மேளதாளத்துடன் மலர்தூவி வரவேற்றச் சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ளது. 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பல வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் பாக்பத் தொகுதியில் வாக்காளிக்க வந்த வாக்களர்களை, மேள தாளத்துடன் மலர் தூவி வரவேற்றுள் ளனர். அந்த தொகுதியில் பாராவ்த் என்ற பகுதியில் உள்ள பூத் எண் 126 இல் என்.சி.சி மாணவர்கள், வாக்குச்சாவடி அமைத்துள்ள வளாகத்துக் குள் நின்று வாக்களிக்க, வருபவர்களை, வாத்தியம் இசைத்து, மலர்தூவி வரவேற்றனர். இந்த சம்பவம் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.