24 மணி நேரத்தில் 512 முறை.. அவசர அழைப்புக்கு கால் செய்து ஆபாசமாக பேசிய பெண்மணிக்கு காப்பு!

24 மணி நேரத்தில் 512 முறை.. அவசர அழைப்புக்கு கால் செய்து ஆபாசமாக பேசிய பெண்மணிக்கு காப்பு!
24 மணி நேரத்தில் 512 முறை.. அவசர அழைப்புக்கு கால் செய்து ஆபாசமாக பேசிய பெண்மணிக்கு காப்பு!

போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு அவசர தேவை வேண்டி தினந்தோறும் ஆயிரக்கணக்கான அழைப்புகள் வரும். ஆனாலும் போலி மிரட்டல் விடுவது போன்ற சில அநாவசிய அழைப்புகளும் வரும்.

இவற்றை எல்லாம் ட்ராக் செய்து அது மீது நடவடிக்கை எடுக்கவே போலீசாருக்கு நேரம் போதாமல் இருக்கும் வேளையில் தொடர்ச்சியாக கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு கால் செய்து வம்புக்கு இழுப்பதும், அச்சுறுத்தும் வகையிலும், இழிவாக பேசவும் செய்திருக்கிறார் பெண் ஒருவர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவைச் சேர்ந்த 51 வயது பெண்மணிதான் இப்படி செய்திருக்கிறார். கிட்டத்த ஒரு ஆண்டுக்கு 12 ஆயிரம் முறைக்கு மேல காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து அவர்களை வசை பாடுவதையே வேலையாக கொண்டிருந்திருக்கிறார்.

எத்தனையோ முறை அந்த பெண்ணை தடுக்க முயற்சித்தும் சோர்ந்துப் போன போலீசார் வேறு வழியின்றி அவரை கைது செய்திருக்கிறார்கள். கார்லா ஜெஃபெர்சன் என்ற பெண் பினெல்லாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

இந்த பெண்தான் அவசர கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் ஊழியர்களை தொடர்புகொண்டு அவர்களை துன்புறுத்தி, சாபமிட்டிருக்கிறார் என செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் காவல்நிலைய செய்தித்தொடர்பாளர் யோலண்டா ஃபெர்னாண்டெஸ் கூறியுள்ளதாக ஃபாக்ஸ் 13 செய்தி மூலம் அறிய முடிகிறது.

கடந்த 8 மாதங்களில் கார்லா ஜெஃபெர்சன் 12,512 முறை அவசர உதவி எண் 911க்கு அழைத்து பேசியிருக்கிறார். இதில் இடைவிடாமல் கால் செய்தது மட்டுமே 10% ஆக இருக்கிறது என்றிருக்கிறார். இதுபோக 24 மணிநேரத்தில் 512 முறைகூட 911ஐ அழைத்து மிரட்டலாகவும், ஆபாசமாகவும் பேசியிருக்கிறார்.

அவசர உதவி அழைப்புகளை ஏற்கும் போதெல்லாம் ஜெஃபெர்சனின் கால் வந்து பலரையும் கடுப்படையச் செய்கிறது. இந்த நிலையில்தான் கார்லா ஜெஃபெர்சனை கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு பெயிலில் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் அவர் 911க்கு அழைத்து துன்புறுத்துவதை விட்டபாடில்லை. ஏனெனில் இதுப்போன்று விளையாடுவதை அவர் பொழுதுபோக்காகவே கொண்டிருந்திருக்கிறார். ஆகவே காவல் அவரச அழைப்பு தவறாக பயன்படுத்துவதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com