”என்ன பெரிய லேப்டாப்? இந்தாங்க சோப்பு வெச்சிக்கோங்க” Flipkart ஆஃபரால் நொந்துப்போன கஸ்டமர்!

”என்ன பெரிய லேப்டாப்? இந்தாங்க சோப்பு வெச்சிக்கோங்க” Flipkart ஆஃபரால் நொந்துப்போன கஸ்டமர்!
”என்ன பெரிய லேப்டாப்? இந்தாங்க சோப்பு வெச்சிக்கோங்க” Flipkart ஆஃபரால் நொந்துப்போன கஸ்டமர்!

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் தற்போது பண்டிகை கால தள்ளுபடி அறிவிப்பால், நம்பிக்கையின் அடிப்படையில் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து அந்தந்த ஆன்லைன் தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

இருப்பினும் வழக்கத்திற்கு மாறான குளறுபடிகள் இந்த பண்டிகைகால தள்ளுபடி வேளையில் கணிசமான அளவுக்கு அதிகரித்திருப்பதாகவே குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. அதன்படி யாஷ்ஸ்வி ஷர்மா என்ற நபர் ஒருவர் தன்னுடைய தந்தைக்காக ஆர்டர் செய்யப்பட்ட லேப்டாப்பிற்கு பதிலாக வெறும் டிடர்ஜெண்ட் சோப்பு கட்டிகள் கொண்ட பேக்கேஜ் மட்டும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இருந்து அனுப்பப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக டெலிவரி செய்யப்பட்ட பேக்கேஜின் ஃபோட்டோவோடு லிங்க்ட்இன் தளத்தில் விரிவாக பதிவிட்டிருக்கிறார் யாஷஸ்வி. அதில், “ஃப்ளிப்கார்ட் தளத்தில் நான் ஆர்டர் செய்த லேப்டாப்பிற்கு பதில் வெறும் சோப்புக்கட்டிகளை மட்டுமே அனுப்பியிருக்கிறார்கள். இது குறித்து சிசிடிவி ஆதாரத்தோடு புகார் கொடுத்தும் ஃப்ளிப்கார்ட் அதிகாரிகள் என்னையே குற்றஞ்சாட்டுகிறார்கள்.

ஃப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரில் என் தந்தைக்காக லேப்டாப் ஆர்டர் செய்திருந்தேன். டெலிவரி செய்யப்பட்டபோது Open box நடைமுறை குறித்து எனது தந்தை அறிந்திருக்கவில்லை. (என் தந்தை மட்டுமல்ல பெரும்பாலான இந்தியர்கள் இது குறித்து அறிந்திருப்பதில்லை). open box என்பது டெலிவரிக்கு வந்த பார்சலை டெலிவரி ஊழியர் முன்பே பார்வையிடுவதற்காக கஸ்டமரிடம் இருந்து டெலிவரி பாயிற்கு OTP கொடுக்கப்படும்.

ஆனால் பார்சலை பெறுவதற்காக மட்டுமே OTP வரும் என்று மட்டுமே என்னுடைய தந்தை நினைத்திருக்கிறார். அதன்படியே பார்சலையும் பெற்றிருக்கிறார். இதனையடுத்து டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்த போது அதில் லேப்டாப்பிற்கு பதிலாக வெறும் சோப்புக் கட்டிகளே இருந்தது.

ஆகவே டெலிவரி பாய் Open box முறையை நடைமுறைப்படுத்தாமல் வெறுமனே டெலிவரி செய்ததற்கான சிசிடிவி காட்சிகள் இருந்ததால் அதனைக் கொண்டு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் அளித்தபோது உங்கள் தந்தைதான் OTP கொடுக்கவில்லை. இதில் எங்கள் தவறு ஏதும் இல்லை. எனவே அதை திரும்பப் பெறவோ, ரீஃபண்ட் செய்யவோ முடியாது எனக் கூறிவிட்டார்கள்.

ஃப்ளிப்கார்ட்டின் அதிகாரபூர்வ விற்பனையாளரிடம் இருந்தே பார்சல் வந்திருப்பதாகவும், அதில் லேப்டாப்புக்கு பதில் சோப்பு இருந்ததை என்னுடைய தந்தை அறிந்திருக்காதது மட்டும்தான் அவரது தவறு. ஆனால் இந்த ஓபன் பாக்ஸ் பற்றி தெரிந்திருக்கும் டெலிவரி பாய் ஏன் OTP-ஐ கேட்டுப்பெறவில்லை?

கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு செல்வதற்கு முன் இதனை ஏன் இங்கு பதிவு செய்கிறேன் என்றால், பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்தியர்கள் எப்போது லேப்டாப்பிற்கு நிகரான பணத்தை சோப்பிற்கு செலவிட மாட்டார்கள் என்பதுதான். தயவுசெய்து இதனை பகிருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பிளிப்கார்ட் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை உறுதிசெய்வது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஓப்பன் பாக்ஸ் டெலிவரி விருப்பத்தை வழங்கும் இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் வாடிக்கையாளர் பேக்கேஜைத் திறக்காமலேயே டெலிவரி எக்ஸிகியூட்டிவ் உடன் தனது OTPயைப் பகிர்ந்துள்ளார். சம்பவத்தின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும், எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழு பணத்தைத் திரும்ப வழங்கும் நடைமுறைகளைத் தொடங்கியது. அது 3-4 வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும். நாங்கள் சிக்கலைக் கண்டறிந்து, தவறு செய்த தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பிளிப்கார்டின் ஓபன் பாக்ஸ் டெலிவரி என்பது வாடிக்கையாளரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்கள் அப்படியே இருக்கும்போது மட்டுமே டெலிவரியை ஏற்றுக்கொண்டு OTPயைப் பகிர வேண்டும். ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், சிறந்த விநியோகச் சங்கிலியை உருவாக்கவும் பிளிப்கார்ட் பல ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளின் விரிவாக்கம் இது. இதைச் சரியாகச் செய்யாதது மேற்கண்ட சம்பவத்திற்கு வழிவகுத்து உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com