மீனவர்கள் மீட்பு: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை

மீனவர்கள் மீட்பு: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை

மீனவர்கள் மீட்பு: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை
Published on

மீனவர்கள் மீட்பு குறித்து கடற்படை, விமானப் படை அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ஒகி புயல் நேரத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்கள் இதுவரை முழுமையாக மீட்கப்படவில்லை. காணாமல் போன மீனவர்கள் எப்போது வீடு திரும்புவார்கள் என உறவினர்கள் ஏக்கத்துடன் காத்திருக்க மீனவர்களை தேடும் பணியும் தீவிரமாகத் தான் நடைபெற்று வருகிறது. இதனிடைய ஒகி புயல் நேரத்தில் கடலில் மாயமான 2,864 மீனவர்களில் 2,604 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மீனவர்கள் மீட்பு குறித்து கடற்படை, விமானப் படை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இருபடைகளின் தென்பிராந்திய தளபதிகளுடன் பிற்பகல் 11:45 மணிக்கு சென்னை தலைமைச் செயலத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். அப்போது காணாமல் போன மீனவர்கள், மீட்கப்பட்ட மீனவர்களின் நிலை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com