\
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தீ விபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தீ விபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தீ விபத்து
Published on: 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரையில் இன்று மாலை முதல் இடியுடன் கூடிய பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள 3 மாடி ஜவுளிக் கடை கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீவிபத்து இடி, மின்னல் காரணமாக மின்கம்பி உரசிக்கொண்டதால் ஏற்பட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

தொடக்கத்தில் முதல் தளத்தில் பற்றிய தீ பின்னர் மூன்று தளங்களுக்கும் பரவியிருக்கிறது. அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவால் இருக்க 3 தீயணைப்பு வாகனங்களில் 50 தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரமாகப் போராடி வருகின்றனர். அத்துடன் தீயைக் கட்டுப்படுத்த முழுவீச்சில் ஹைட்ராலிக் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com