சர்ச்சை பேச்சு: சீதாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு

சர்ச்சை பேச்சு: சீதாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு

சர்ச்சை பேச்சு: சீதாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு
Published on

’’இந்துக்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்பது தவறான வாதம்’’ என்று கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது ஹரித்துவார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய சிங்கை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்துக்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதைத்தான் மகாபாரதமும், ராமாயணமும் வெளிப்படுத்துகின்றன, இந்துக்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்பது தவறான வாதம் என்று குறிப்பிட்டார். சீதாராம் யெச்சூரியின் இந்தக் கருத்துக்கு சிவசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் யோகா குரு பாபா ராமதேவ் மற்றும் சில மடாதிபதிகள் யெச்சூரி மீது  ஹரித்துவார் போலீசில் புகார் செய்தனர்.  ‘’நம் முன்னோர் களை யெச்சூரி அவமானப்படுத்தியுள்ளார். இது பெருங்குற்றம். இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து ஹரித்வார் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com