\
வெறுப்பூட்டும் பேச்சு: கர்நாடக பாஜக எம்.பி மீது வழக்குப் பதிவு

வெறுப்பூட்டும் பேச்சு: கர்நாடக பாஜக எம்.பி மீது வழக்குப் பதிவு

வெறுப்பூட்டும் பேச்சு: கர்நாடக பாஜக எம்.பி மீது வழக்குப் பதிவு
Published on

முஸ்லிம்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கர்நாடக பாஜக எம்.பி. பிரகலாத் ஜோஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மசூதிகளில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளது என ஜோஷி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் ஹூப்ளி மாவட்டத்தில் உள்ள கஸ்பா காவல்நிலையத்தில் முகமது ஹனிப் என்பரால் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹூப்ளியில் உள்ள சதர் சோபா பகுதியை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார் ஜோஷி. இதனையும் சுட்டிக்காட்டி அவரது பேச்சு வெறுப்புணர்வை வளர்க்கும் வகையில் உள்ளதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

முன்னதாக அமித்ஷாவின் பேச்சை தவறுதலாக கன்னடத்தில் மொழிபெயர்த்தவரும் பிரகலாத் ஜோஷிதான். அமித்ஷா பேசியதை, “நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்ததில்லை. மேலும் மோடி நாட்டை சீர்குலைத்து விடுவார்” என கன்னடத்தில் மொழி பெயர்த்து பேசியிருந்தார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com