\
டிடிவி.தினகரனுக்கு காய்ச்சல்: நாளை மறுநாள் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்!

டிடிவி.தினகரனுக்கு காய்ச்சல்: நாளை மறுநாள் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்!

டிடிவி.தினகரனுக்கு காய்ச்சல்: நாளை மறுநாள் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்!
Published on: 

தனக்கு ஏற்பட்ட காய்ச்சலால் ஓய்வில் இருப்பதால் நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக டிடிவி
தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று அதிமுகவின் இரு அணிகளாக இருந்த எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும்
ஒரே அணியாக இணைந்தனர். தமிழக அமைச்சரவையும் மாற்றி அறிவிக்கப்பட்டது. மூன்றாவது அணியாக
செயல்பட்ட சசிகலா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரனிடம் இது தொடர்பாக கருத்து கேட்க பத்திரிக்கையாளர்கள்
முற்பட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “மீடியா நண்பர்களுக்கு... காய்ச்சல்
மற்றும் தொண்டை வலி உள்ளதால், மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்கிறேன். 23 ஆம் தேதி உங்களை
சந்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com