டிரெண்டிங்
கட்டையால் தாக்கிய தந்தை.. மரணத்தை தழுவிய மகன்.. உருக்கமான பின்னணி!
கட்டையால் தாக்கிய தந்தை.. மரணத்தை தழுவிய மகன்.. உருக்கமான பின்னணி!
வேதாரண்யம் அருகே கத்திரிப்புலம் கிராமத்தில் மோட்டார் இன்ஜின் வைத்த பிரச்சினையில் தந்தை கட்டையால் தாக்கியதில் மகன் உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் கோவில்குத்தகை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் இவரது மனைவி நாகவல்லி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர் உயிருடன் இருந்தபோது படுத்திருந்த இடத்தில் நாகராஜன் மோட்டார் எஞ்சினை வைத்துள்ளார்.
உயிரிழந்த முருகையன்
தன்னுடைய தாய் படுத்திருந்த இடத்தில் எதற்காக எஞ்சினை வைக்கிறீர்கள் என்று தந்தை நடராஜனிடம் முருகையன் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தந்தை நாகராஜன், மகன் முருகையனை கட்டையால் தாக்கினார்.
தந்தை நாகராஜன்
இதில் பலத்த காயமடைந்த முருகையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் கரியாப்பட்டினம் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து தந்தை நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்