’கதண்டு’ விஷவண்டு தாக்கியதில் தந்தை, மகள் உயிரிழப்பு: மயிலாடுதுறையில் சோகம்..!

’கதண்டு’ விஷவண்டு தாக்கியதில் தந்தை, மகள் உயிரிழப்பு: மயிலாடுதுறையில் சோகம்..!
’கதண்டு’ விஷவண்டு தாக்கியதில் தந்தை, மகள் உயிரிழப்பு: மயிலாடுதுறையில் சோகம்..!
மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை கொடிய கதண்டு என்ற விஷவண்டு தாக்கியதில் தந்தை, மகள் உயிரிழந்தனர்.
 
கதண்டு என்ற கொடிய விஷவண்டு அதிகஅளவில் காட்டுப்பகுதியில் காணப்படும். காடுகள் அழிக்கப்பட்டதால் பனைமரங்கள், தென்னை மரங்களில் கூடுகட்டி வசித்து வருகிறது. இந்த கொடிய விஷவண்டு கூட்டமாக வந்து தாக்கும். ஒருவரை 4க்கும் மேற்பட்ட கதண்டுகள் கடித்தால் உயிர்பிழைப்பது கடினம். தலையில் கடித்தால் விஷம் உடனடியாக மூளையை தாக்கும் கிட்னியை செயலிலக்க செய்யும். சிறு குழந்தைகளை இரண்டு வண்டுகள் கடித்தாலே உயிரிழக்க நேரிடும். வண்டுகள் இனத்தில் கொடிய விஷமுள்ள இந்த வண்டு கூடுகட்டியிருப்பதை அறிந்து தகவல் தெரிவித்தால் அதை உடனடியாக தீயணைப்பு துறையினர் அழித்துவிடுவர்.
 
 
 
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதி, பனைமரங்களில் உள்ள கதண்டுகள் அழிக்கப்பட்டு வந்தாலும், கதண்டு விஷவண்டு தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அவ்வப்போது சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை அருகே கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 42). அதே பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
 
இவர் தனது மகள் இன்சிகாவுடன் (வயது 3) வயல்வெளி பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, அவ்வழியில் உள்ள பனைமரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டு விஷவண்டு திடீரென்று அப்பகுதியில் செல்வோரை தாக்கியது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மகள் இருவரையும் தாக்கி கடித்தது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்சிகா அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட தந்தை ஆனந்தகுமாரும் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
 
ஆனந்தகுமாருக்கு சங்கரி(36) என்ற மனைவியும் பவித்ரா (5) என்ற மற்றொரு மகளும் உள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மகள் கதண்டு தாக்கி இறந்து போனது கடலங்குடி கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, விஷ வண்டு தாக்குதலில் காயமடைந்த மேலும் 3 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com