ஸ்டாலினுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு
திமுக செயல் தலைவர் ஸ்டாலினை அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்குவதல் உள்ளிட்ட விவகாரங்களில், மத்திய மாநில அரசுகளுக்கு திமுக அழுத்தம் தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இது தொடர்பான போராட்டங்களுக்கு ஆதரவு தர பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த 11.07.2017 அன்று சட்டப்பேரவையில் கதிராமங்கலம் கிராம மக்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்றும், நெடுவாசலில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.