விவசாய நிலத்தில் கிடந்த பிளாஸ்டிக் டப்பா : கையில் எடுத்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

விவசாய நிலத்தில் கிடந்த பிளாஸ்டிக் டப்பா : கையில் எடுத்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

விவசாய நிலத்தில் கிடந்த பிளாஸ்டிக் டப்பா : கையில் எடுத்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

வேலூரில் விவசாய நிலத்தில் கிடந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்த பெண்ணின் கை விரல்கள் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் துண்டானது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இலட்சுமி அம்மாள் புரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மனைவி சந்திரா (40). இவர்களுக்கு மலையடிவாரம் விவசாய நிலம் உள்ளது. வழக்கம்போல இன்று விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சந்திரா, வீட்டிற்கு ஓட்டி செல்ல கயிற்றை அவிழ்க்க முயன்றுள்ளார்.

அப்போது அங்கே கிடந்த பிளாஸ்டிக் டப்பாவை சந்திரா கையில் எடுத்த போது, அதிலிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் சந்திராவின் இடது கையில் இரண்டு விரல் துண்டானது. சந்திராவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நிலக்கடலை பயிரை நாசம் செய்யும் வனவிலங்குகளுக்கு யாரோ வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு தான் அது என சந்திராவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினரும், மேல்பட்டி காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com