மீனவர்கள் மத்தியில் தவறான செய்தியை பரப்பினார்கள்: பொன் ராதாகிருஷ்ணன்
மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தேடுதல் பணியை முறையாக செய்யவில்லை என்று மீனவர்கள் மத்தியில் தவறான செய்தி பரப்பப்பட்டதாக
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒகி புயலினால் கன்னியாகுமரிக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
தொடக்கத்தில் மக்கள் புயலை சாதாரணமாக கருதியதாகவும், ஆனால் அதன் தாக்கம் தற்போது மாபெரும் இழப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும்
தெரிவித்தார்.
மேலும் மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தேடுதல் பணியை முறையாக செய்யவில்லை என்று தவறான செய்தி பரப்பப்பட்டதாக கூறிய அவர்,
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த 20லட்சம் ரூபாய் உதவித் தொகை வேறு எங்கும் அறிவிக்கப்படவில்லை என்று கூறினார்.
அதே போல் மீனவர்களை தேடும் வேட்டையில் தங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்ததாகவும் பொன்
ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.