\
கள்ளக்குறிச்சி: நள்ளிரவில் அண்ணா சிலைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

கள்ளக்குறிச்சி: நள்ளிரவில் அண்ணா சிலைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

கள்ளக்குறிச்சி: நள்ளிரவில் அண்ணா சிலைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்
Published on: 

கள்ளக்குறிச்சி அருகே பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

1978-ஆம் ஆண்டு முன்னாள் எம்எல்ஏ எஸ்பி.பச்சையப்பன் தலைமையில் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலையை, தேர்தல் நடத்தை விதிகளின்படி முழுவதுமாக மறைக்கப்பட்டு போலீசாரால் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த விரைந்து வந்த ஒன்றியச் செயலர் எஸ்பி.அரவிந்தன், பொதுமக்கள் மற்றும் போலீசார் உதவியுடன் சிலை எரிந்த பகுதியை தண்ணீரால் கழுவி தூய்மைப்படுத்தினார். தொடர்ந்து மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.

தேர்தல் காலத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் மர்மநபர்கள் அண்ணா சிலைக்கு தீ வைத்தது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com