சென்னை அணியின் பேட்டிங் தூணாக வலம் வரும் டூபிளஸ்ஸி!

சென்னை அணியின் பேட்டிங் தூணாக வலம் வரும் டூபிளஸ்ஸி!

சென்னை அணியின் பேட்டிங் தூணாக வலம் வரும் டூபிளஸ்ஸி!
Published on

ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் சென்னை அணியின் தொடக்க வீரர் டூ பிளஸ்ஸி. நடப்பு சீசனில் அவரது பங்களிப்பு குறித்து பார்க்கலாம்.

நடப்பு சீசனில் சென்னை அணி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய முதல் ஆட்டத்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் வெளியேறி அதிர்ச்சியளித்தார் டூ பிளஸ்ஸி. முதல் ஆட்டத்தில் மோசமாக வெளியேறியதால் இரண்டாவது ஆட்டத்தில் அணியின் நிலை அறிந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அவர். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார்.

இந்தப்போட்டியின் மூலம் நடப்பு சீசனில் வெற்றிக்கணக்கை தொடங்கியது சென்னை அணி. மூன்றாவது போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் அமைந்தது டூ பிளஸ்ஸியின் ஆட்டம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார் அவர். நான்காவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளாசல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார் டூ பிளஸ்ஸி. 60 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 95 ரன்களை விளாசினார்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 41 பந்துகளில் அரைசதம் விளாசினார் டூ பிளஸ்ஸி. அசத்தலான ஃபார்மில் இருந்த டூபிளசி, ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்திலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்துகளை எதிர்கொண்ட அவர் 56 ரன்களை விளாசி PURPLE CAP-பையும் கைப்பற்றினார். பேட்டிங்கில் மட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் டூபிளஸ்ஸியின் பங்கு அணிக்கு பக்கபலமாக உள்ளது. சவாலான கேட்களையும் சர்வ சாதாரணமாக பிடிக்கும் வல்லமை கொண்டவராக திகழ்கிறார்.

தென்னாப்ரிக்க அணியின் கேப்டனாக இருந்தவர், சர்வதேச அளவில் அனுபவம் கொண்டவர் என்ற கர்வமின்றி முழு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறார் டூபிளஸ்ஸி. பவுண்டரிகளில் இவரைத் தாண்டி பந்துகள் செல்வது அவ்வளவு எளிதல்ல. இதனை வர்ணிக்கும் விதமாக சென்னை நிர்வாகம் டூபிளஸ்ஸியை எல்லைச் சாமி என்றே அழைக்கிறது.

பேட்டிங், ஃபீல்டிங் என இரண்டிலும் தனது அனுபவங்களால் சென்னை அணியை அலங்கரித்து வரும் டூபிளஸ்ஸி இந்த சீசனின் அதிகபட்ச ரன் சேர்த்த வீரராக மிளிர்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com