\
சிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் காட்டுங்கள்..

சிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் காட்டுங்கள்..

சிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் காட்டுங்கள்..
Published on

சிறந்த விளையாட்டு வீரர்களை எம்.எல்.ஏக்கள் பரிந்துரை செய்தால், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு தயாராக இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, குன்னூர் சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் ராமு, சர்வதேச போட்டிகளில் நடத்தக்கூடிய தட்பவெட்ப நிலை குன்னூர் பகுதியில் நிலவுவதாகவும், அங்கு உலக தரம் வாய்ந்த ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஹாக்கி மைதானம் ஏற்கனவே அங்கு இருப்பதாகவும், அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார். மேலும், விளையாட்டு நலனில் அக்கறை கொண்டு பல்வேறு உதவிகளை அரசு செய்து வருவதாகவும், சிறந்த விளையாட்டு வீரர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்தால், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயராக இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com