\
குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு!

குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு!

குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு!
Published on

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என தென்காசி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30.08.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்குமென தெரிவித்துள்ளார்கள்.

அதன்படி, தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான தென்காசி மாவட்டம் குற்றாலம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை அமலில் இருக்குமென கலெக்டர் தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com