“எல்லா சோதனை முயற்சிகளும் வெற்றி பெறுவதில்லை” - அகிலேஷ்

“எல்லா சோதனை முயற்சிகளும் வெற்றி பெறுவதில்லை” - அகிலேஷ்

“எல்லா சோதனை முயற்சிகளும் வெற்றி பெறுவதில்லை” - அகிலேஷ்
Published on

எல்லா பரிசோதனை முயற்சிகளும் வெற்றி பெறுவதில்லை என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, உத்தரப் பிரதேசத்தின் பரம எதிரிக் கட்சிகளான பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி சேர்ந்தன. எனினும், மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இக்கூட்டணி 15 இடங்களை மட்டுமே பிடித்தது. பாஜக கூட்டணி 64 இடங்களையும், ரேபரேலி தொகுதியை காங்கிரசும் வென்றன. இதில், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. இருபெரும் கட்சிகள் சேர்ந்தும் இந்தக் கூட்டணிக்கு மொத்தம் 38 சதவிகித வாக்குகளே கிடைத்தன. 

மக்களவை தேர்தல் தோல்வியை அடுத்து, உத்தரப் பிரதேசத்தில் 11 பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும் என்று மாயாவதி அதிரடியாக அறிவித்தார். மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி ஆதரவு வாக்குகள் பகுஜன் சமாஜுக்கு கிடைக்கவில்லை என்றும், அகிலேஷ் யாதவின் மனைவியைகூட சமாஜ்வாதி கட்சியினரால் வெற்றி பெறச் செய்ய இயலவில்லை எனவும் அவர் கடுமையாக விமர்சித்தார். 

இந்நிலையில், எல்லா பரிசோதனை முயற்சிகளும் வெற்றி பெறுவதில்லை என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். மேலும், “நான் மைசூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்தேன். ஒரு அறிவியல் மாணவராக, எல்லா சோதனைகளும் வெற்றியில் முடிவதில்லை என்று எனக்கு தெரியும். இதுஒரு சோதனைதான். தவறு எங்கு நடந்துள்ளது என்று கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com