அனைத்துக்கட்சி கூட்டம் : 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடி மற்றும் நிர்வாக திறன் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தி.க.தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மா.கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இ.கம்யூ.மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, மனிதநேய மக்கள் கடசி தலைவர் ஜவஹருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் உட்பட 11 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கே.எஸ். அழகிரிக்கு பதிலாக தங்கபாலு பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் கொரோனா மரணங்கள் குறித்த முக்கிய தரவுகளை மறைத்த அதிமுக அரசுக்கு கண்டனம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும், உயிர்தியாகம் செய்த கொரோனா முன்கள வீரர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும், அனைத்து உள்ளாட்சிகளுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், அரசியல் கண்ணோட்டத்துடன் நடக்கும் காவல்துறைக்கு கண்டனம், பிற்படுத்தப்பட்டடோர், பட்டியிலனத்தோர் இட ஒதுக்கீட்டை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும், சுற்றுப்புறசூழல் தாக்க அறிக்கை 2020ஐ திரும்ப பெற வேண்டும், பத்திரிகை, ஊடகங்கள் விவகாரத்தில் கருத்து சுதந்திரத்தை முறையாக காத்திட அனைத்து எதிர்கட்சிகள் உள்ளடக்கி ஒருங்கிணைந்த கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

