“ஒலிம்பிக்கில் ஒவ்வொரு ஆட்டமும் ஒவ்வொரு புள்ளியும் மிக முக்கியம்” - பி.வி.சிந்து
இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரியோவில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்று அசத்தினார். இந்த முறை டோக்கியோவில் தங்கம் வெல்ல ஆவலுடன் காத்திருக்கிறார் அவர். ஒலிம்பிக் கமிட்டி இன்று வெளியிட்ட குழு பட்டியலில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ‘குரூப் J’-வில் சிந்து இடம் பெற்றுள்ளார். முதல் சுற்றில் ஹாங்காங்கின் Cheung Ngan Yi மற்றும் இஸ்ரேலின் Ksenia Polikarpova எதிர்த்து அவர் விளையாட உள்ளார்.
தொடர்ந்து ரவுண்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு அவர் முன்னேறினால் பதக்கம் வெல்லலாம்.
“எல்லோரும் அவர்களின் சிறந்த பார்மில் இருப்பார்கள். நானும் எனது சிறந்த பார்மை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தொடர் சுலபமான ஒன்றாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் இது ஒலிம்பிக். ஒவ்வொரு ஆட்டத்திலும் பெறுகின்ற ஒவ்வொரு புள்ளியும் முக்கியமானது” என சிந்து தெரிவித்துள்ளார்.