\
முதியவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி அமமுக வேட்பாளர்

முதியவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி அமமுக வேட்பாளர்

முதியவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி அமமுக வேட்பாளர்
Published on: 

ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் சிவசுப்பிரமணியன், முதியவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சிவசுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இன்று முத்தம்பாளையம் சத்யா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட வேட்பாளர், திடீரென முதியவர்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனை சற்றும் எதிர்பாராத முதியவர்கள் வேட்பாளரை தடுத்து ஆசிவழங்கி வாழ்த்தி அனுப்பினர். வேட்பாளர்கள் குறிப்பிட்ட வயது வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு யுக்தியை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com