\
ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம்: சமாதானம் செய்துவைத்த அமைச்சர்

ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம்: சமாதானம் செய்துவைத்த அமைச்சர்

ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம்: சமாதானம் செய்துவைத்த அமைச்சர்
Published on

திருவள்ளூர் அருகே நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, ஓபிஎஸ் ஆதராளர்கள் சிலர், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களை மதிப்பதில்லை என குற்றம்சாட்டினர்.

அரசு ஒப்பந்தங்கள் தங்கள் தரப்பினருக்கு வழங்கப்படுவதில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈபிஎஸ் ஆதரவாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார், ஓ.பி.எஸ். ஆதரவாளர் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அனைவரையும் சமாதானம் செய்து வைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com