உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி தர வேண்டும் : தொண்டர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்
எத்தனை துயரங்கள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி காணும் பயிற்சியை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தங்களுக்கு வழங்கியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர்.
அதிமுவின் 46-வது தொடக்க விழாவை முன்னிட்டு கட்சித் தொண்டர்களுக்கு இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர் வளர்த்த இயக்கம் என்பதால் தான் அதிமுக இரும்புக் கோட்டையாக இன்றும் நிற்கிறது. எம்ஜிஆரின் மறைவுக்கு பின் கட்சியை வழி நடத்திட கடவுள் தந்த கொடையாக வாழ்ந்தவர் ஜெயலலிதா.
சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளையெல்லாம் வென்று தனிப்பெரும் மரியாதையை பெற்றவர் ஜெயலலிதா. கட்சித் தொண்டர்கள் அனைவரும் விசுவாசமாக இருந்து உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.