டிரெண்டிங்
ஈபிஎஸ், ஓபிஎஸ் இல்லாத அமைச்சரவை வேண்டும்: திவாகரன்
ஈபிஎஸ், ஓபிஎஸ் இல்லாத அமைச்சரவை வேண்டும்: திவாகரன்
ஈபிஎஸ், ஓபிஎஸ் இல்லாத அமைச்சரவை வேண்டும் என்பதே தன்னுடைய கோரிக்கை என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “தமிழகத்தில் அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை பொறுப்பில் இருப்பவர்கள் உணர வேண்டும். சசிகலாவின் அனுமதி பெற்று உண்மையான பொதுக்குழுவை கூட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். அமைச்சர்களும் அதிகாரிகளும் சுமுக உறவில் தான் உள்ளனர். சமாதானத்திற்கு அழைத்தால் மைசூரில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாக வருவார்கள். சசிகலா, தினகரன் நியமனம் செல்லுமா என்பதை தொண்டர்களும், மக்களும்தான் சொல்ல வேண்டும். ஈபிஎஸ், ஓபிஎஸ் இல்லாத அமைச்சரவை வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கையாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

