ஐபிஎல் டி20: டெல்லியுடன் மோதும் கொல்கத்தாவின் பலம் பலவீனம் என்ன?

ஐபிஎல் டி20: டெல்லியுடன் மோதும் கொல்கத்தாவின் பலம் பலவீனம் என்ன?
ஐபிஎல் டி20: டெல்லியுடன் மோதும் கொல்கத்தாவின் பலம் பலவீனம் என்ன?

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து களம் காணவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பலம் பலவீனம் குறித்து பார்க்கலாம்.

கேப்டன் மார்கனின் எழுச்சியால் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். பேட்டிங்கில் கடும் சிக்கல்களைச் சந்தித்து வந்த கொல்கத்தா அணிக்கு மத்திய வரிசை வீரர்கள் பலம் சேர்க்க தொடங்கியுள்ளனர். முன் வரிசை பேட்டிங்கில் இளம் வீரர் சுப்மன் கில்லின் பொறுப்பற்ற ஆட்டங்கள் சிறப்பான அடித்தளம் என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது. கில்லை மத்திய வரிசைக்கு கொண்டு செல்ல வேண்டும் என விமர்சகர்கள் குரல் எழுப்பும் அளவிற்கு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் அவர்.

நிதிஷ் ரானா பேட்டிங்கில் தடுமாற்றத்தைச் சந்தித்து வருவது பின்னடைவே. போராட்ட குணத்துடன் விளையாடும் ராகுல் திரிபாதி பேட்டிங்கிற்கு பெரும் பலமாக உள்ளார். கேப்டன் மார்கன் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது. மோசமான ஃபார்மில் இருந்த தினேஷ் கார்த்திக், ரசல் இருவரும் சராசரியான ஃபார்மிற்கு திரும்பியிருப்பது ஆறுதல். கம்மின்ஸின் ஆல்ரவுண்டர் ஆட்டம் அணிக்கு கூடுதல் பலம். மற்றொரு ஆல்ரவுண்டர் சுனில் நரைனும் பேட்டிங்கில் எழுச்சி பெறும் பட்சத்தில் கொல்கத்தா பேட்டிங்கில் அசுர பலம் பெறும்.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரைன், விக்கெட்டுகளைச் சரிப்பதோடு ரன் வேகத்தையும் கட்டுப்படுத்துகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா, ஷிவம் மாவி ஆறுதலான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். ரசலின் பவுலிங் பங்களிப்பு கூடுதல் வலுசேர்க்கிறது. கம்மின்ஸ் நிலையான ஃபார்மில் பந்து வீச தவறுவது சிறு பின்னடைவே.

பவர் பிளேவில் விக்கெட்டுகளைச் சரிக்கும் அளவிற்கு கம்மின்ஸ் ஃபார்முக்கு திரும்பினால் கொல்கத்தா அணி ஒட்டுமொத்த பவுலிங்கிலும் புத்துணர்வு பெறும். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் களமிறங்கி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளதால் இனி வரும் போட்டிகளில் கூடுதல் கவனத்துடன் வியூகங்களை அமைத்து நெட் ரன் ரேட்டையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com