பாஜக கூட்டத்தில் காலியாக நாற்காலிகள்... படம்பிடித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் முயற்சி

பாஜக கூட்டத்தில் காலியாக நாற்காலிகள்... படம்பிடித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் முயற்சி

பாஜக கூட்டத்தில் காலியாக நாற்காலிகள்... படம்பிடித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் முயற்சி
Published on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காலியாக காணப்பட்ட நாற்காலிகளை படம்பிடித்த பத்திரிகையாளர்களை சிலர் தாக்க முயன்றனர்.

நாகர்கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உரையாற்றும்போது கூட்டத்தில் இருந்து ஏராளமானோர் எழுந்து சென்றதால் நாற்காலிகள் காலியாக காணப்பட்டன. இதனையடுத்து காலியாக காணப்பட்ட நாற்காலிகளை பத்திரிகையாளர்கள் சிலர்படம்பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனைதடுத்த சிலர், பத்திரிகையாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கவும் முயன்றனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனது உரையை, பாதியில் முடித்துக்கொண்டு வெளியேறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com