டிரெண்டிங்
தகுதிநீக்கம் எதிரொலி: 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்க முடிவு
தகுதிநீக்கம் எதிரொலி: 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்க முடிவு
தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களுடைய தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இன்று மாலைக்குள் சபாநாயகரின் நடவடிக்கை குறித்த செய்தி அரசிதழில் வெளியிட தமிழக அரசு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கும் பட்சத்தில் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கும் எனத் தெரிகிறது.