\
Viral Video: 'நீங்க யானையாக இருந்து அரிப்பு வந்தால் இப்படிதான் செய்வீர்கள் போல?'

Viral Video: 'நீங்க யானையாக இருந்து அரிப்பு வந்தால் இப்படிதான் செய்வீர்கள் போல?'

Viral Video: 'நீங்க யானையாக இருந்து அரிப்பு வந்தால் இப்படிதான் செய்வீர்கள் போல?'
Published on

வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த பாதைகளில் பெரும்பாலும் யானைகள் உலா வருவது தொடர்பான வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்களில் காணக் கிடைக்கின்றன. சில வீடியோக்கள் அதிர்ச்சிகரமாகவும், சில வீடியோக்கள் வேடிக்கையாகவும், நெகிழ்ச்சியாகவும் கூட இருக்கும்.

ஆனால் தற்போது வைரலாகியிருக்கும் வீடியோ ஒன்று நெட்டிசன்கள் பலரையும் கவர்ந்திருப்பதோடு, காண்போரை வியப்படையவும் செய்திருக்கிறது. அதன்படி, வனப்பகுதிக்குள் வந்த காரை ஒன்றை வழிமறித்த யானை ஒன்று அதன் மீது ஏற்றி உட்கார்ந்து பல அட்டகாசங்களை செய்திருக்கிறது.

முதலில் காரின் டயரை அகற்ற முயன்ற அந்த யானை அங்கும் இங்கும் சுற்றி முற்றி வந்ததோடு காரின் மீது ஏறி அமர்ந்து தன்னுடைய உடலால் தேய்க்கிறது. தொடர்ந்து காரின் முன்பக்க பேனட்டையும், கார் கண்ணாடியையும் உடைத்திருக்கிறது.

இதனை பகிர்ந்த ட்விட்டர்வாசி, “நீங்கள் யானையாக இருந்து உங்களுக்கு அறிப்பு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதனைக் கண்ட நெட்டிசன்கள், “கார் ஓனர் இன்சுரன்ஸ் கம்பெனியிடம் என்ன காரணத்தை கூறுவார் என யோசிக்கிறேன்” என்றும், “காரின் மீது யானை தன்னுடைய பின்பக்கத்தை தேய்த்ததை எப்படி நம்புவார்கள்?” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com