மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்: சத்யபிரதா சாஹூ

மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்: சத்யபிரதா சாஹூ
மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்: சத்யபிரதா சாஹூ

சித்திரை திருவிழா நடைபெறுவதால் மதுரையில், மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி இரவு 8 மணி வரை நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சித்திரை திருவிழா வருடம் தோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்ரல் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான தேர்தலும் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால், அன்றைய தினம் வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும். எனவே வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பார்த்தசாரதி என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். காவல்துறையினரும் அன்றைய தினம் போதுமான பாதுகாப்பை வழங்க இயலாது என்றும், தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். அப்போது, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் உதவியுடன் தேர்தலை நடத்த முடியும் என்றும் வாக்குப் பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரையில், மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி இரவு 8 மணி வரை நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர்,  மற்ற பகுதிகளை பொருத்தவரையில் காலை காலை 7 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அதுவும் ஒருமணிநேரம் நீட்டிப்பு செய்யப்பட்டு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com