12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை பாமக வெளியிட்டுள்ளது.

அதில், “மழலையர் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ. 500 வீதமும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதமும் நிதியுதவி வழங்கப்படும். 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி.

பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இலவச மருத்துவம், இலவச மருத்துவ காப்பீடு, இலவச கொரோனா தடுப்பூசி ஆகியவை வழங்கப்படும்.

தமிழகத்தில் விளைவிக்கும் அனைத்து வேளாண்பொருட்களும் அரசு கொள்முதல் செய்யப்படும். அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும். தமிழ்நாட்டில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 2வது தலைநகராக திருச்சியும், 3வது தலைநகராக மதுரையும் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com