ஏப்.6 விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் ஆணையம் எச்சரிக்கை

ஏப்.6 விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் ஆணையம் எச்சரிக்கை
ஏப்.6 விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் ஆணையம் எச்சரிக்கை

தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ஆம் தேதி விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் ஆணையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள வர்த்தகம் மற்றும் உணவு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் எனவும் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புகார் அளிக்க மாநில, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது 94872 69270, 94425 40984, 044-24335107 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொண்டு தொழிலாளர்கள் புகார் அளிக்கலாம் எனவும் தொழிலாளர் ஆணையர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com