\
கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பி மாற்றம் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பி மாற்றம் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பி மாற்றம் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை
Published on

கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் எஸ்பி மகேஸ்வரனை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி இருவரையும் தேர்தல் அல்லாத பணிகளுக்கு தேர்தல் ஆணையம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தற்போது கரூர் ஆட்சியராக பிரசாந்த் வடநரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷஷாங்க் சாய் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை காவல்துறை துணை ஆணையராக ஜெயச்சந்திரன் ஐபிஎஸ் நியமனம் என்பதையும் தேர்தல் ஆணையம் அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

தேர்தல் பணிகள் தொடர்பாக புகார்கள் வந்ததையடுத்து கோவை, திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com